இந்தியாவில் உள்ள பாதி வீடுகளில் செல்போன்கள் உள்ளது, ஆனால் கழிப்பறை வசதிகள் இல்லை என்று புதிய கணக்கெடுப்பை வெளியிட்ட சென்சஸ் பதிவாளர்-தலைமை ஆணையர் சந்திரமௌலி தெரிவித்துள்ளார்.
246.6 மில்லியன் வீடுகளில் 46.9% தான் கழிப்பறை வசதி உள்ளது. மீதமுள்ளவர்களில் 3.2% பேர் பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். 49.8 சதவீதத்தினர் திறந்த வெளிகளை கழிப்பறைகளாக பயன்படுத்துகின்றனர்.
மாறாக 63.2% வீடுகளில் தொலைபேசி இணைப்புகள் உள்ளன. இதில் 53.2% செல்போன்கள் என்று ஒரு தரவை சென்சஸ் வெளியிட்டுள்ளது.
சென்செஸ் 2011 வெளியிட்டுள்ள தரவுகளில் இது போன்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
நுகர்வோர் பொருட்கள் சந்தையை ஆக்ரமிக்கும் தேவையற்ற தொழில்நுட்பப் பொருட்கள் பலரது வீடுகளிலும் குவிந்திருக்க டாய்லெட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது இந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
உயர் தொழில் நுட்பப் பொருட்கள் பல வீடுகளை ஆக்ரமித்திருக்க மீதமுள்ளவர்கள் வீடுகளில் அடுப்பெரிக்கத் தேவையான நவீன பொருட்கள் இல்லாமல் மரம், சாணி, விராட்டி கொண்டு அடுப்பு எரிக்கப்படுவதால் அந்த வீட்டுப் பெண்கள் கடுமையான உடல்நலக்கோளாறுகளில் சிக்கித் தவிப்பதாக இந்த சென்சஸ் கூறுகிறது.
இன்னும் கொடுமை என்னவெனில் 32% வீடுகளில்தான் சுத்தமான குடிநீர் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது. 17% குடும்பத்தினர் குடத்தை எடுத்துக் கொண்டு பல மைல்கள் சென்று தண்ணீர் எடுக்கவேண்டிய நிலை உள்ளது.
இந்தியாவில் உள்ள வீடுகளில் 47.2% வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன. 19% வீடுகளில்தான் ரேடியோ அல்லது டிரான்சிஸ்டர்கள் உள்ளன.
தேவையற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தருவதையே நம் ஆட்சியாளர்கள் பெரிய கடமையாகச் செய்து வருகின்றனர், மாறாக கிராமங்களில் இன்னமும் அடிப்படை வசதிகள் கூட சரியாக கிடைப்பதில்லை என்பதுதான் 'இந்தியா ஒளிர்கிறது", "இந்தியா முன்னேறுகிறது", "இந்தியா வல்லரசாகிறது" போன்ற வாசகங்களில் அடியில் ஒளிந்துள்ள குரூர உண்மையாகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக