புதன், 28 மார்ச், 2012

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலங்களின் வழிகாட்டு மதிப்பு உயர்வு வரும் 1ம் தேதி அமலுக்கு வருவதால், சொத்து வாங்குவோரின் செலவு அதிகரிப்பது உறுதியாகியுள்ளது.

2 நாட்களுக்குமுன் வெளியான மாநில பட்ஜெட்டில் தமிழகம் முழுக்க சொத்துகளின் அரசு மதிப்பு உயர்வு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரும் என கூறப்பட்டிருந்தது. இதன்படி, மாநிலம் முழுக்க எந்த அளவு மதிப்பு உயர்வு இருக்கும் என்பதை பதிவுத்துறை முடிவு செய்து விட்டதாகவும், வரும் ஏப்ரல் முதல் எந்த மதிப்புக்கு சொத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்பது www.tnreginet.co.in என்ற வலைதளத்தில் தரப்பட்டுள்ளதாகவும், இத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிஎம்டிஏ எல்லைக்கு உட்பட்ட சென்னை மாநகர் பகுதி தவிர, மற்ற இடங்களின் மதிப்பு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழுவால் இறுதி செய்து தரப்பட்டதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தவிர, இந்த சொத்துகளை வாங்குவோர் இதுவரை சொத்தின் அரசு மதிப்பில் 6 சதவீத முத்திரை தீர்வையுடன், 2 சதவீத சர்சார்ஜ் மற்றும் 1 சதவீத பதிவுக் கட்டணம் என 9 சதவீத மதிப்புக்கு செலவிட்டதற்கு பதிலாக, இனி பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட முத்திரை தீர்வையான 5 சதவீதத்துடன், 2 சதவீத சர்சார்ஜ், 1 சதவீத பதிவுக் கட்டணம் என 8 சதவீதம் செலவழித்தால் போதும் எனவும் பத்திர பதிவுத்துறை சார்பில் கூறப்படுகிறது. எனினும், இந்த செலவு குறைப்பு சொத்து விற்பனை, தானமாக கொடுப்பது போன்ற 6 சதவீத முத்திரை தீர்வை கொண்ட பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் சொல்லப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக