புதன், 11 ஜூலை, 2012

சவுதி அரேபியாவின் மூத்த இளவரசர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சவுத் மரணம்

ரியாத்-சவுதி அரேபியாவின்  ஒரு மூத்த இளவரசர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரணம் அடைந்தார்

எண்ணை வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவின் மூத்த இளவரசர்
முகமது பின் சவுத் 78 வயதான. இவர் கடந்த 1960-ம் ஆண்டில் அந்நாட்டின்  பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.
 இந்த நிலையில், (09/07/2012 )திங்களன்று  அவர் மரணம் அடைந்தார். இந்த தகவலை சவுதி அரசு அறிவித்துள்ளது.
அவர் எப்படி இறந்தார் என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இவரை (09/07/2012 ) திங்களன்று   நல்லடக்கம் செய்யபட்டது

இவர் கடந்த 1986 முதல் 2010-ம் ஆண்டு வரை அல்பாகா மாகாணத்தின் கவர்னராக பணிபுரிந்துள்ளார். கடந்த 1964-ம் ஆண்டு இவரது தந்தை சவுதி மன்னர் சவுத் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக