ஞாயிறு, 1 ஜூலை, 2012

கடலூர் மாவட்டத்தில் மீன்கள் வரத்து குறைவு: மீனவர்கள் ஏமாற்றம்

கடலூர்முதுநகர்: கடலூர் மீனவர்கள் வலைகளில் குறைந்த அளவே மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 742 விசைப் படகுகள், 1,600 பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் கடலுக்கு சென்ற மீனவர்கள் வலைகளில் அதிக அளவு மத்தி மீன்கள் சிக்கின.

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகபட்சமாக 200 டன் வரையில் மீன் வரத்து இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மீனவர்கள் வலைகளில் குறைந்த அளவே மீன்கள் சிக்குகின்றன. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆழ்கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதும், நீரின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ள தாலும் மீன்வரத்து குறைந்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக