செவ்வாய், 1 அக்டோபர், 2013

பரங்கிப்பேட்டையில் மத்தி மீன் விலை இரு மடங்கு உயர்வு

பரங்கிப்பேட்டை:கேரளாவில் மத்தி மீன் வரத்து குறைந்ததால் நேற்று பரங்கிப்பேட்டையில் மத்தி மீன் விலை இரு மடங்காக உயர்ந்தது.
பரங்கிப்பேட்டையின் கடற்கரையோர கிராமங்களான பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, சின்னூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். பெரும்பாலான மீனவர்கள் மத்தி மீன்களை அதிகளவில் பிடித்து வருகின்றனர்.
அவை கேரளா மாநிலத்திற்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். கேரளாவில் மத்தி மீன் விலை குறையும் பட்சத்தில் கோழி தீவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுவிடும். நேற்று வழக்கத்திற்கு மாறாக மத்தி மீன் விலை கடுமையாக உயர்ந்தது.
கேரளாவில் மத்தி மீன் வரத்து குறைந்ததால் நேற்று பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மத்தி மீன்களளின் விலை இருமடங்காக உயர்ந்தது. சாதாரணமாக மத்தி மீன் 50 கிலோ பாக்ஸ் 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். நேற்று மத்தி மீன் 50 கிலோ பாக்ஸ் 2400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதனால் மீனவர்கள் மகிச்சியடைந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக