திங்கள், 2 ஜூலை, 2012

டவுன் பஸ்கள் பாதியிலேயே திரும்புவதால் கடற்கரையோர மீனவ கிராம மக்கள் பாதிப்பு

பரங்கிப்பேட்டை: சிதம்பரத்தில் இருந்து சாமியார்பேட்டைக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் திரும்பிவிடுவதால் கடற்கரையோர கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிதம்பரம்- சாமியார்பேட்டை, கடலூர்- பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி, சிதம்பரம்- பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் இயக்கப்பட்டு வருகிறது.தினமும் ஒரு தடவை என வாத்தியாப்பள்ளி, சாமியார்பேட்டைக்கு செல்லாமல் அரசு பஸ்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் திரும்பி சென்றுவிடுகிறது. இதனால் கடற்கரையோர மீனவ கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் கடற்கரை கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள், நோயாளிகள் அதிகமானோர் சிதம்பரம், கடலூருக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் சாமியார்பேட்டை வரை செல்ல வேண்டிய அரசு டவுன் பஸ்கள் சில நேரங்களில் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் திரும்பிவிடுவதால் பஸ்வரும் நம்பிக்கையில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர்.எனவே அரசு மருத்துவ மனையுடன் திரும்பி செல் லும் டவுன் பஸ்களை கண்காணித்து பஸ் டிரை வர்கள் மீது போக்குவரத் துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட் டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக