ஞாயிறு, 26 மே, 2013

IPL-6,முதல் முறையாக சாம்பியனானது மும்பை இந்தியன்ஸ்!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிக சாதுரியமாக எதிர்கொண்டு பந்து வீசிய மும்பை இந்தியன்ஸ், 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.சென்னை சூப்பர் கிங்ஸின் கனவுக்கு சமாதி கட்டியவர் லசித் மலிங்காதான். அவரது முதல் ஓவரிலேயே அதிரடியாக மைக் ஹஸ்ஸி ஒரு ன்னிலும், சுரேஷ் ரெய்னா ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.அடுத்த ஓவரில் பத்ரிநாத்தும் டக் அவுட் ஆகி வெளியேற சென்னை அணி நிலைகுலைந்தது. அதன் பின்னரும் கூட சென்னை சுதாரிக்கவில்லை.மாறாக விக்கெட்களை இழந்தபடியே இருந்தது.
ஒருபக்கம் முரளி விஜய் நிலைத்து ஆட முயன்றார். ஆனால் அவரையும் மிட்சல் ஜான்சன் அவுட்டாக்கி அனுப்பி விட்டார்.இப்படியாக அடுத்தடுதது விக்கெட்கள் விழுந்த நிலையில் கேப்டன் டோணி மட்டும் நிலைத்து ஆடி ரன்களைக் குவிக்க முயன்றார். இதனால் சற்றே நம்பிக்கை பிறந்தது. கடைசி வரை தீரமாக விளையாடினார் டோணி. ஆனால் மறு முனையில்விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்ததால்அவரால் எதுவும் செய்ய முடியாமல் போனது.தோல்வி உறுதியான நிலையிலும் கூட தனது அதிரடியை விடவில்லை டோணி. கடைசிப்பந்தில் கூட அவர் பவுண்டரியை விளாசினார. இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள்மட்டுமே எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.முன்னதாக சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி ரன் குவிக்கதடுமாறியது. 15 ஓவர்கள் வரை அந்த அணி பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் தவித்தது. அதன் பிறகுதான் அது சற்றே ரன் குவிப்பில் சீரியஸாக குதித்தது.ஆட்ட நாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கீரன் போலார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடைசிநேரத்தில் கீரன் போலார்ட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். கடைசி ஓவரில் கடைசி 2 பந்துகளை அவர் சிக்ஸருக்கு விரட்டியதால் மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்களைக் கடக்க முடிந்தது.அதேசமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸின் பிராவோ அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்களைச் சாய்த்தார்.முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.ஆரம்பத்திலிருந்தே சென்னை அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. இதனால் விக்கெட்கள் அடுத்தடுத்து விழஆரம்பித்தன. முதல் ஓவரிலேயே மோஹித் சர்மா பந்து வீச்சில் வேயன் ஸ்மித் ஆட்டமிழந்து வெளியேறினார்.அடுத்த ஓவரில் அல்பி மார்க்கல் பந்து வீச்சில் தரே ஆடடமிழந்துவெளியேறனார். பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா வீழ்ந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் தடுமாறியது.இருப்பினும் திணேஷ் கார்த்திக்கும், அம்பட்டி ராயுடுவும் இணைந்து நிதானமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்ததால், மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலை மோசமாகவில்லை.ராயுடு 37 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். திணேஷ் கார்த்திக் தன் பங்குக்கு 21 ரன்களை எடுத்தார்.இருப்பினும் கீரன் போலார்டி் சிறப்பான ஆட்டத்தால் மும்பை சிறப்பான நிலைக்குப் போக முடிந்தது. அபாரமாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 ரன்களைக் குவித்தார். கடைசி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டினார். இதன் மூலம் அவர் தனது அரை சதத்தையும் பூர்த்தி செய்தார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் பிராவோ மிகச் சிறப்பாக பந்து வீசினார். அடுத்தடுத்து நான்கு விக்கெட்களைச் சாய்த்து மும்பையின் ரன் குவிப்பை நிறுத்தினார்.சென்னை அணியின் பந்து வீச்சு ஆரம்பத்தில் படு சிறப்பாக இருந்தது. இடையில் சற்றே தொய்வடைந்தது. இதைப் பயன்படுத்தி மும்பை சற்றே ரன் குவித்து விட்டது.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களைக் குவித்தது மும்பை இந்தியன்ஸ்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக