திங்கள், 27 மே, 2013

கடற்கரைப் பகுதியை சுற்றுலா மையமாக அறிவிக்கக் கோரிக்கை

கடலூர் :  கடலூர் முதல் பிச்சாவரம் வரை உள்ள கடற்கரைப் பகுதிகளை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என சிதம்பரம் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். 
கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. இந்த விழாவில், சிதம்பரம் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் பேசியது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முழுமையும் அரசுடமை ஆக்கப்பட்டதால், மருத்துவப் படிப்பு மாணவர்கள் திறமையின் அடிப்படையில் சேரும் நிலை உள்ளது. கடலூர் - பரங்கிப்பேட்டை - பிச்சாவரம் வரை கிழக்கு கடற்கரைப் பகுதி இயற்கை பேரெழில் சூழ்ந்த பகுதியாகும்.சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் தலமாகும். எனவே இவற்றை உள்ளடக்கி சுற்றுலா மையமாக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக