செவ்வாய், 28 மே, 2013

பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் வனக்காடுகளைப் பார்த்து மகிழ்ச்சி

சிதம்பரம்:கோடை வெயிலால் அனல்காற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. படகு சவாரிக்குச் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் கண்காணிப்பு கோபுரத்தில் உள்ள டெலஸ்கோப்பு மூலம் சதுப்பு நிலக்காடுகளை ரசித்து செல்கின்றனர்.
பரங்கிப்பேட்டை மற்றும் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற வனச்சுற்றுலா மையம் உள்ளது. இங்கு சதுப்பு நிலக்காடுகளுடன் இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை எனும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால் உலக அளவில் இந்த சுற்றுலா மையம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படு
கிறது.
இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா
பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் பிச்சாவரம் வனக்காடுகளில் "ஜில்லென' இதமான காற்று வீசும்.
இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கோடை காலங்க
ளில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
இந்தாண்டு கோடை காலம் துவங்கும் முன்பே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் கோடை வெப்பத்தைத் தணிக்க உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்
கணக்காண சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் வன மையத்திற்கு வந்து சென்
றனர்.
மாலை நேரங்களில் கூட்டம் அதிகமான காணப்படுகிறது.
விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகரித்து வந்ததால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படகில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
படகில் செல்ல முடியாத வயதானவர்கள் சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்புக் கோபுரத்தில் ஏறி மாங்குரோவ்ஸ் தாவரங்களை இங்கிருந்தபடியே கண்டு மகிழ்கின்
றனர்.
மே மாதம் துவக்கத்தில் சுற்றுலா மையத்தில் கோடை வெயிலின் தாக்கம், வனக்காடுகளில் அனல் காற்று வீசியதால் படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் குறைந்ததால் சுற்றுலா மையத்தில் உள்ள இன்ஜின் படகுகள், துடுப்பு படகுகளுக்கு ஓய்வு கிடைத்தது.
தற்போது வனக்காட்டில் அனல்காற்று குறைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கோடை காலமான ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும்
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுமார் 25 லட்சத்திற்குமேல் வருவாய் கிடைத்தது.
இந்தாண்டு கோடை வெயில் தாக்கம், வனக்காட்டில் அனல்காற்று அதிகமாக வீசியதால் கடந்தாண்டைவிட இந்தாண்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இந்தாண்டு இதுவரை சுமார் 19 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக