வியாழன், 30 மே, 2013

தமிழகத்தில் பரவலாக மழை,பரங்கிப்பேட்டையிலும் சிலு சிலுத்தது


பரங்கிப்பேட்டை :தமிழகத்தில் இன்று பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் கடும் வெயிலால் பாதிக்கப் பட்ட மக்கள் இந்த மழையினால் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
பரங்கிப்பேட்டை ,கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  இன்று நல்ல மழை பெய்து சிலு சிலுத்தது

மேலும் தென் தமிழகம் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காரணமாக வெப்பம் நீங்கி, அங்கு குளுமை நிலவுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி சுற்றுவாட்டாரத்திலும், செஞ்சி, தருமபுரி மற்றும் காரைக்காலில் பலத்த மழை பெய்கிறது.

 
 
 
                                                                                                               படங்கள் :முக நூல் ,முச்சந்தி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக