வியாழன், 30 மே, 2013

SSLC எனப்படும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை(31.05.2013) வெளியிடப்படுகின்றன


சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை(31.05.2013) வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ஆம் முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்வு மையங்களில் மொத்தம் 11 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றது.


இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்!
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக