
வங்கக் கடலில் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிக்காக ஏப்ரல் 15ம் தேதி முதல், மே 29ம் தேதி வரை, 45 நாட்களுக்கு ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த காலங்களில் பாறைகளின் அடியில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். அப்போது, ஆழ் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் விசைப் படகுகள், வலைகளை பயன்படுத்துவதால் குஞ்சுகள் அழியும் நிலை ஏற்படுவதை தடுக்கவே இந்த தடை உத்தரவு.கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் மீன்பிடி படகுகள் 2,342 உள்ளன. இதில், பைபர் படகு மற்றும் கட்டுமரங்களில் குறிப்பிட்ட நாட்டில்கல் மைல் தூரம் வரை சென்று மீன்பிடிக்கப்பட்டு, உள்ளூர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது. மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் வலைகளில் ஏற்பட்ட பழுதை மீன்பிடி தடைக் காலங்களில், சரி செய்தனர்.இந்நிலையில், தடைக் காலம் இன்று 29ம் தேதி இரவுடன் முடிகிறது. இதனால், மீனவர்கள் 30ம் தேதி முதல் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக