கடலூர்:கடலூர் செம்மண்டலத்தில் உள்ள கரும்பு ஆராய்ச்சி பண்ணை நிலத்தில் 27.15 ஏக்கர் பரப்பளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டப்பட உள்ளது.இதற்கான இடத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதிய ஆட்சியர் அலுவலக வளாக அமைப்பை அமைச்சருக்கு விளக்கிக் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சம்பத் கூறியது: ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டம்தான் இந்த ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலக வளாகம்.
ஆனால், அதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், இப்போதுதான் இதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இந்தப் பண்ணையில் இருந்து 27.15 ஏக்கர் நிலத்தை, ஒப்புதல் பெற்று வாங்கி இருக்கிறோம். இதற்கு மாற்றாக ஆராய்ச்சிப் பண்ணைக்கு வேறொரு இடத்தில் இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்சியர் அலுவலக கட்டடப் பணிகள் 16 மாதங்களில் நிறைவடையும்' என்றார்.
இது குறித்து பொறியாளர்கள் கூறுகையில், "ரூ.25 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய ஆட்சியரகம் கட்டப்படுகிறது. ஜூன் மாதம் டெண்டர் கோரப்பட்டு அதைத் தொடர்ந்து பணிகள் விரைந்து நடைபெறும்.
இந்தக் கட்டடம் பசுமைக் கட்டடமாக இருக்கும். திராவிட கட்டடக் கலை அம்சத்தில் இந்தக் கட்டடம் கட்டப்படும். வளாகத்துக்கு அருகிலேயே ஒரு மின்வாரிய துணைமின் நிலையமும் வருகிறது' மேலும் கடலூர் பஸ் நிலையம் அமைப்பதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலூர் பஸ் நிலையம் உடனடியாக மாற்றுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.என்றனர் அமைச்சர்







0 கருத்துகள்:
கருத்துரையிடுக