புதன், 29 மே, 2013

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 10ம் வரை நீட்டிப்பு!

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் வெப்பநிலையால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். மேலும் பகலில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
எதிர் வரும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகளை திறப்பதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில். பள்ளிகளின் கோடை விடுமுறையை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக