சனி, 1 ஜூன், 2013

SSLC முடிவுகள் தேர்ச்சி விகதம் கடைசி இடத்தில் கடலூர் மாவட்டம்

கடலூர் :பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வட மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ந்துவீழ்ச்சியடைந்து வருகின்றன.தமிழகத்தில் கடந்த 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், தூத்துக்குடி மாவட்டம் 95.46 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றது.வேலூர் மாவட்டம் 81.13 சதவீதம், விழுப்புரம் 78.03, அரியலூர் 74.94, கடலூர் 73.21, திருவண்ணாமலை மாவட்டம் 69.91 சதவீதம் பெற்று முறையே கடைசி ஐந்து இடங்களைப் பிடித்தன.
நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கன்னியாகுமாரி மாவட்டம் 97.29 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. தூத்துக்குடி மாவட்டம் 95.42 சதவீதத்துடன் இரண்டாமிடம், ஈரோடு 95.36, திருச்சி 95.14 சதவீதத்துடன் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்தன.வழக்கமாக அதிக தேர்ச்சி சதவீதத்துடன் முதலிடத்தைத் தக்க வைத்திருந்த விருதுநகர் மாவட்டம் இம்முறை 95.08 சதவீதம் தேர்ச்சி பெற்று ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.கடந்தாண்டு 29வது இடத்திலிருந்த கடலூர் 75.25 சதவீதம் தேர்ச்சி பெற்று 32வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.தேர்ச்சி சதவீதத்தில் அரியலூர் 82.41, விழுப்புரம் 81.99, நாகை 79.53, திருவண்ணாமலை 78.09, கடலூர் மாவட்டம் 75.25 முறையே கடைசிஐந்து இடங்களில் உள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக