பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே சிமெண்டு கலவை எந்திரத்தில் சிக்கி வெளிமாநில கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் ராகுண்டா நகரை சேர்ந்தவர் பிடவான்புயன் மகன் சுரேந்தர் (வயது 23). இவர் பரங்கிப்பேட்டை கரிகுப்பத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சுரேந்தர் சிமெண்டு கலவை எந்திரத்தின் உள்ளே சென்று சுத்தம் செய்து கொண்டு இருந்தார். இதை கவனிக்காத சகதொழிலாளி ஒருவர், எந்திரத்தை திடீரென இயக்கினார்.
சாவு
இதில் எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சுரேந்தர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக