பரங்கிப்பேட்டை, பரங்கிப்பேட்டை தனியார் அனல்மின்நிலையம் (ஐ.எல்.எப்.எஸ் பவர் கம்பெனி) முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்ஜினீயர் சாவு
விழுப்புரத்தை அடுத்த பிடாகத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29), என்ஜினீயர். இவர் கடலூர் மரியசூசை நகரில் தங்கியிருந்து பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் தனியார் அனல்மின்நிலையத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 14-ந் தேதி மின்சாதன பொருட்களை கையாண்டபோது எதிர்பாராதவிதமாக அருண்குமார் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் இறந்த அருண்குமார் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி அனல்மின்நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து சிதம்பரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அனல்மின் நிலையம் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர். காலை 11 மணியளவில் கடலூர் தெற்குமாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் மாநில துணைபொது செயலாளர் திருஞானம், மாநில துணைத்தலைவர்கள் முருகன், வேணுபுவனேஷ்வரன், வன்னியர்சங்க மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி, ஒன்றிய செயலாளர் கார்த்தி மற்றும் கிராம மக்கள் அனல்மின்நிலையம் முன்பு திரண்டு வந்தனர். இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்துநிறுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் கூறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
50 பேர் கைது
இதையடுத்து பா.ம.க. முக்கிய நபர்கள் மட்டும் அனல்மின்நிலைய அதிகாரிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மற்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே பா.ம.க.வினருக்கு ஆதரவு தெரிவித்து அனல்மின்நிலைய ஊழியர்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர். அவர்களில் 50 பேரை போலீசார் கைது செய்து பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் ஒரு உயிர் பலி:கண்டு கொள்ளாத தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக