புதன், 17 ஜூன், 2015

பரங்கிப்பேட்டை பகுதி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை


பரங்கிப்பேட்டை,பரங்கிப்பேட்டை பகுதி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
பரங்கிப்பேட்டை மற்றும் புவனகிரி பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நேற்று பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதியில் உள்ள குளிர்பானக்கடைகள், உணவுவிடுதிகள், இறைச்சி கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது பரங்கிப்பேட்டை சின்னக்கடைத்தெருவில் உள்ள மளிகைக்கடைகளில் காலாவதியான மளிகைப்பொருட்கள் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட மேகி நூடுல்ஸ், பான்மசாலா போன்ற பொருட்கள் உள்ளதா என்றும் சோதனை நடத்தினர்.
கடும் நடவடிக்கை
அப்போது மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் ராஜா கூறுகையில், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த சோதனையின்போது அவருடன் வட்டார உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஏழுமலை, குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக