புதன், 17 ஜூன், 2015

கடலூர் மாவட்ட எஸ்.பி மாற்றம் புதிய எஸ்.பி. யாக விஜயகுமார் நியமனம்

கடலூர் : கடலூர் மாவட்ட கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ராதிகா ,சென்னை ஆவடி ஆயுதப்படை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராதிகாவுக்கு பதிலாக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., ஆக இருந்த விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழகத்தில் நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் பெண் அதிகாரிகள் ஆவர்.இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொன்னியும், திருவண்ணாமலை எஸ்.பி.,யாக இருந்த முத்தரசி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக