வெள்ளி, 12 ஜூன், 2015

மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 663 பேர் மீது வழக்கு

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற 663 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவு
மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் வருகிற ஜூலை 1–ந் தேதியில் இருந்து கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டினால் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். விசாரணைக்கு பிறகு வழக்கு பதிவு செய்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
663 பேர் மீது வழக்கு அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் அனைத்து பகுதிகளிலும் போலீசார் திடீர் வாகன தணிக்கை நடத்தினார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற 663 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் கடலூர் உட்கோட்டத்தில் 144 பேர் மீதும், சிதம்பரம் உட்கோட்டத்தில் 190 பேர் மீதும், பண்ருட்டியில் 138 பேர் மீதும், விருத்தாசலத்தில் 42 பேர் மீதும், சேத்தியாத்தோப்பில் 54 பேர் மீதும், நெய்வேலியில் 61 பேர் மீதும், திட்டக்குடியில் 34 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக