வெள்ளி, 24 ஏப்ரல், 2015

புனித நகரங்கள் மக்கா -மதினா வை இணைக்கும் அதிவேக ரயில்

 
மக்கா :சவூதி அரேபியாவில் அமைந்துள்ள இரு புனித நகரங்களான மக்கா மாநகருக்கும், மதினா மாநகருக்கும் அதிவேக இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

நான்கு ஆண்டுகளான நடைபெற்ற இந்த பணி விரைவில் நிறைவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்காவுக்கும், மதீனாவுக்கும் 449.2 கி.மீ தூரமாகும்.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு பேரூந்தில் செல்ல வேண்டுமென்றால் சுமார் 5 மணி நேரம் ஆகிறது. இரு புனித நகரங்களுக்கான மின்னல் வேக விரைவு ரயிலில் 90 நிமிடத்தில் சென்று விட முடியும்.


மின்சாரம் முலம் இயங்கும் இந்தா ரயில்  ஒரு மணி நேரத்திற்கு 300 கிமீ  தூரத்தை கடக்கும்   என்றும் நவீன வசதிகளுடன் மற்றும் தொலை தொடர்பு முறைமைகள் (wifi) கொண்ட கருவிகளுடன் இருக்கும்  என்றார்.  மற்றும் புழுதிப்புயல் களின்  போது ரயில்கள் மற்றும் சூடான மற்றும் ஈரப்பதம் காலநிலை ஏற்றவாறு பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதாகவும்  தற்போது  இந்தா ரயில்  "சோதனை ஓட்டத்தில் உள்ளதாக  ," சவுதி ரயில்வே அமைப்பு (SRO) தலைவர் முகம்மது அல்- சுவைக்கத்  கூறினார்.
 








 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக