வெள்ளி, 24 ஏப்ரல், 2015

20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள்லண்டன்:மைசூர் புலி திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் நேற்று முன்தினம் ஏலம் விட்டது. இதில் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக 30 ஆயுதங்களும் ஏலம் போனது.

திப்பு சுல்தான் தனது ஆட்சியில் பயன்படுத்திய அனைத்து ஆயுதங்களிலும் புலி சின்னத்தை பொறித்து வைத்திருந்தார். அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த மணிகள் பதித்த புலித்தலையோடு கூடிய வாள் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. முன்னதாக இந்த வாள் 37 லட்ச ரூபாய் முதல் 56 லட்ச ரூபாய் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிக அதிக தொகைக்கு இந்த வாள் ஏலம் விடப்பட்டுள்ளது.

அவரது படைப்பிரிவால் பயன்படுத்தப்பட்ட மூன்று பவுண்டு எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கி 13 கோடிக்கு ஏலம் போனது. இது தவிர அவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய துப்பாக்கி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதுடன், ஆயுதக்குவியலில், வளைவான கத்திகள், மணிகள் பதித்த வாள், அம்புகள், வேலைப்பாடுடன் கூடிய தலைக்கவசங்கள், பிஸ்டல்கள் ஆகியவையும் ஏலத்தில் விடப்பட்டன. மிகுந்த கலைநயத்துடன் இவை அனைத்தும், நேர்த்தியான முறையில் செய்யப்பட்டிருந்ததாக ஏல நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக