சனி, 25 ஏப்ரல், 2015

ஆய்வக உதவியாளர் பணி: மாவட்டத்தில் 12 மையங்களில் விண்ணப்பம் பதிவேற்றம்


கடலூர்:ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதையொட்டி தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்டத்தில் 12 மையங்களில் இன்று பதிவேற்றம் செய்யப்படுகிறது.இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரும் மே 6ம் தேதி வரை 12 மையங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.ஆண்களுக்கு கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட்ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.
சிதம்பத்தில் ஆண்களுக்கு ஆர்.சி.டி.,மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. விருத்தாசலத்தில் ஆண்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.திட்டக்குடியில் ஆண்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.காட்டுமன்னார்கோவிலில் ஆண்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெண்களுக்கு பி.ஆர்.ஜி., மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.வடலூரில் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மற்றும் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருபாலருக்கும் நடக்கிறது.


கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.7.2014 அன்று 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். உயர்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வுக் கட்டணம் 100 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் 50 ரூபாய் ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை (உரிய சான்று முன்னிலைப்படுத்த வேண்டும்).விண்ணப்பிக் செல்லும்போது, 10ம் வகுப்பு சான்றிதழ், ஜாதித் சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர்கல்வித் தகுதி சான்றிதழ், பணி முன் அனுபவச் சான்றிதழ் ஆகிய சான்றுகளின் அசல் மற்றும் நகல் எடுத்து வரவேண்டும்.இத்தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு அளவில் அறிவியல் பாடத்தில் 120 கொள்குறி வினாக்களும், 30 பொது அறிவு கொள்குறி வினாக்களும் கேட்கப்படும்.தேர்வு வரும் மே மாதம் 31ம் தேதி காலை 10.00 மணி முதல் 12:30 மணி வரை நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பணிக்கு ஏறத்தாழ 4,900 பணியாளர்களை தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான விளம்பரம் அந்தந்த மாவட்ட பத்திரிகைகள் தினத்தந்தி, தினமணி மற்றும் Indian Express  நாளிதழ்களில் 22, 23, 24, 4 &15  ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
  • குறைந்த பட்சம் கல்வி தகுதி : 10th
  • வயது (BCM) : 18 to 32
  • தேர்வு முறை : சாதாரண தேர்வு முறை
  • ஆதரவற்ற விதவை பெண்கள் : உயர்கல்வி படித்திருந்தால் வயது வரம்பு தேவை இல்லை. 
  • இணையதளம் : www.tndge.in
  • இட ஒதுக்கீடு : முறைப்படி மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • சம்பளம் : Rs 23,000
நமதூர் மக்கள் பயன்படுத்திக் கொள்வார்களா?
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக