சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2014-2015ஆம் கல்வியாண்டில் பி.இ. படிப்புக்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புக்கு 75 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
இது குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மருத்துவம், வேளாண்மை, பொறியியல் படிப்புகளுக்கு தமிழகஅரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
படிப்பு மையங்களில் விண்ணப்பங்கள் விற்பனை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், பி.இ., பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், 62 படிப்பு மையங்களிலும்
விநியோகிக்கப்படுகின்றன.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 150 மாணவர்களும், பிடிஎஸ் படிப்புக்கு 100 மாணவர்களும் சேர்க்கப்படவுள்ளனர். மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும்.
புதிய படிப்பு: நிகழ் கல்வியாண்டில் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பி.இ. ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் என்ற புதிய படிப்பு தொடங்கப்படுகிறது. அனுமதி சேர்க்கைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் தனியாக ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான (5 Years Integrated Courses) அனுமதி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றார் ஷிவ்தாஸ்
மீனா.
பேட்டியின்போது பதிவாளர் என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிறிஸ்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக