சிதம்பரம்:சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை (மே.16) வெள்ளிக்கிழமை அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சுதாமணிரத்தினம், அதிமுக
வேட்பாளர் மா.சந்திரகாசி, காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமான் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள்: ஆண்கள்- 6,74,073, பெண்கள்- 6,64,592, திருநங்கைகள்- 19, மொத்தம்- 13,38,684.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 79.96 சதவீத வாக்குப்பதிவானது: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள்: 10,91,489. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக சதவீதம் விபரம்: சிதம்பரம்- 74.84 சதவீதம், புவனகிரி- 80.32 சதவீதம், காட்டுமன்னார்கோயில்- 80.27 சதவீதம், அரியலூர் -84 சதவீதம், ஜெயங்கொண்டம்- 81.08 சதவீதம், குன்னம்- 79.01. 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய மொத்த சதவீதம்- 79.96 ஆகும்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை மே.16-மே தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரியும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான இ.சரவணவேல்ராஜ் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினரின் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்
வாக்கு எண்ணிக்கை குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் தொகுதி தேர்தல் அதிகாரியுமான இ.சரவணவேல்ராஜ் தெரிவித்தது: சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காட்டுமன்னார்கோயில், குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர், புவனகிரி, சிதம்பரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேசைகள் கொண்டதாக அமைக்கப்பட்டு அலுவலர்கள் 21 ரவும்டுகளாக வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்வார்கள். இப்பணிக்கு 750 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3 டிஎஸ்பிகள் தலைமையில் 750 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணைஆட்சியர் நிலையில் 6 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் பொது பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் தவிர மற்றவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. வேட்பாளர்களின் முகவர்கள், அவர்களுக்கான அனுமதி பெற்றுள்ள மேசைகளில் காலை 7 மணிக்குள் அனுமதிக்கபடுவார்கள். ஒவ்வொரு சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும் என ஆட்சியர் இ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக