வெள்ளி, 2 மே, 2014

ராஜஸ்தான் மாநில வாலிபர் பரங்கிப்பேட்டை யில் கைது

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் பதுங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப் அலியை  பரங்கிப்பேட்டை காவல்துறையினர் உடன் சேர்ந்து ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜோத்பூர் லைகன் மோகராவில் வசிக்கும் ஷபீர்அலி மகன் அஷ்ரப் அலி என்று கூறப்படுகிறது.பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகத்தின் அடிபடையில் அஷ்ரப் அலியை
போலீசார் தேடி வந்தனர்.

அஷ்ரப் அலியின் செல்போன் மூலம் அவர் இருக்கும் இடத்தை  ராஜஸ்தான் போலீசார் தெரிந்து கொண்டனர். பின்னர் தமிழக போலீசார் உதவியுடன் நேற்று  பரங்கிப்பேட்டையில் தமிழக மற்றும் ராஜஸ்தான் போலீசார் முற்றுகையிட்டனர்.பின்னர் அஷ்ரப் அலியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்
தற்போது கைது ஆகியுள்ள  அஷ்ரப், நிதா ஈ ஹக் என்ற உருது மொழி பத்திரிகையின் ஆசிரியர். ராஜஸ்தானின் ஜோத்பூரை தலைமையிடமாகக் கொண்டு வெளி வந்த பத்திரிகை, ஆகும்

மேலும் இவர்களிடம் தமிழக காவல்துறையினர் இவர்களுக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அஷ்ரப் அலி இன்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.விசாரணை முடிந்த பின்னர் ராஜஸ்தான் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்


விடிய, விடிய விசாரணை
 
இதையடுத்து வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.மஞ்சுநாத், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.முருகன் ஆகியோரும் நேரில் வந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் அஷ்ரப்அலிக்கு தொடர்பு இருக்குமா? என விசாரணை நடத்தினர்.
பின்னர் அஷ்ரப்அலியை கடலூரை அடுத்த தூக்கனாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அவரிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவருக்கும், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது.
 
 


 கொளுத்தும் வெயிலில் அவரது தலையை துணியால் மூடி அழைத்து வந்திருந்ததால் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்போது அருகில் நின்ற போலீசார் அஷ்ரப் அலியின் தலையில் போர்த்தி இருந்த துணியை அகற்றி, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தனர். பின்னர் அவர் குடிப்பதற்காக தண்ணீர் கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக