செவ்வாய், 13 மே, 2014

ஓய்ந்தது மழை: கத்திரி வெயில் தாக்கம் அதிகரிப்பு

கடலூர்  கடலூர்  மாவட்டத்தில்கோடை மழை ஓய்ந்து, அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து காணப்பட்டது.
கடலூர்  மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோடையை மிஞ்சிடும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந் நிலையில் கடந்த 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடக்க நாளிலேயே கடலூர்  மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, 4 நாள்களாக கடலூர்  மாவட்டத்தில் கோடை மழை பெய்தது. இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் கடலூர் பகுதியில் மழை ஓய்ந்து காணப்பட்டது.
வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் அனைவரும் குடைபிடித்தும், துப்பட்டா, புடவை போன்றவற்றால் தலையை மூடியபடியும் நடந்து சென்றனர்.
மேலும் தொடர் மழையால் ஓய்ந்திருந்த வெள்ளரி, நுங்கு, கரும்புச் சாறு போன்றவற்றின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை முதல் சூடுபிடிக்கத் தொடங்கியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக