புதன், 14 மே, 2014

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து: 6 ஊழியர்கள் காயம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நீராவிக் குழாய் வெடித்து, அதிலிருந்து வெளியேறிய வெப்ப நீர் பட்டதில் 6 ஊழியர்கள் காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் உள்ள அணு உலையில் யுரேனியத்தைக் குளிர்விக்கும் நீர் வெப்ப நீராக குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில், இன்று முதலாவது அணு உலையில், யுரேனியத்தைக் குளிர்விக்கும் பகுதியில் குழாய் குழாய் வெடித்தது. இதில் குழாயிலிருந்து வெளியேறிய வெப்ப நீர் பட்டதில், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 6 ஊழியர்கள் காயாமடைந்தனர்.
காயமடைந்த 3 ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 6 பேரும் அணு உலை வளாகத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அணு உலை பாதுகாப்பாக இருப்பதாகவும், பராமரிப்புப் பணியின்போது விபத்து ஏற்பட்டதாகவும் கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், மேல் சிகிச்சைக்காக ஊழியர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக