சனி, 10 மே, 2014

சிங்கப்பூர் கலவர வழக்கு: குற்றவாளிக்கு 30 மாத சிறை, 3 பிரம்படிகள் தண்டனை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட தமிழருக்கு, 30 மாத சிறைத் தண்டனையும், மூன்று பிரம்படிகளும் வழங்கி, அந்த நாட்டு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.சிங்கப்பூரின், "லிட்டில் இந்தியா" பகுதியில், கடந்த ஆண்டு,  சக்திவேல் குமாரவேலு என்பவர், பஸ் விபத்தில் இறந்தார். தமிழகத்தை சேர்ந்த இவர், கட்டுமான தொழிலாளியாக பணியாற்றினார்.
விபத்து நடந்ததும், பஸ்சில் பயணம் செய்த, மற்ற இந்திய
தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், 400 இந்தியர்கள் மீது, குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, 25 தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, சிங்கப்பூர் கோர்ட், தமிழகத்தை சேர்ந்த குற்றவாளி ராமலிங்கம் சக்திவேலுக்கு, 30 மாத சிறைத் தண்டனையும், மூன்று பிரம்படிகளும் வழங்கி உத்தரவிட்டது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக