சோமா: துருக்கியில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 232 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தையடுத்து, துருக்கியில் 3 நாள் துக்கம்
அனுசரிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
துருக்கியின் வடக்குப் பகுதியான மணிசா மாகாணத்திற்கு உள்பட்ட சோமா நகரில், தனியார் நிலக்கரிச் சுரங்கத்தில் 787 தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தச் சுரங்கத்தில் நள்ளிரவில் திடீரென்று மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு, அது வெடித்துச் சிதறியது. சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதாலும், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாலும் உள்ளே இருந்த தொழிலாளர்கள் நாலாபுறமும் ஓடினார்கள். ஆனால், சுரங்கத்தின் வெளியேறும் வழி மூடிக்கொண்டதால், தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்திற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து துருக்கி எரிசக்தித்துறை அமைச்சர் தனேர் இல்டிஸ் கூறுகையில், “சுரங்கத்தில் இருந்த 787 பேரில் 360க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 232 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சுரங்கத்திற்கு ள் 100க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டுள்ளனர். சுரங்கத்திற்குள் புகை மூட்டமாக இருப்பதால், மூச்சுத் திணறலால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால், சுரங்கத்தின் ஆழமான பகுதிக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
- See more at: http://www.thoothuonline.com/archives/65903#sthash.42hd8TbG.dpuf

0 கருத்துகள்:
கருத்துரையிடுக