சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் கு.தேவராஜன் தேர்வு முடிவு மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 87.4% மாணவிகளும், 93.4% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%ஆகும். வழக்கம் போல் மாணவர்களை விட
மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
மாநில அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1,193 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
1200-க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று தர்மபுரி ஸ்ரீவியஜ்வித் மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு மாநிலத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் துளசிராஜன் 1191 மதிப்பெண்கள் பெற்று பிடித்தார். மூன்றாவது இடத்தை சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்யாவும் 1191 மதிப்பெண்கள் பெற்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
4,94,100 மாணவர்கள் 60%-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200 மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்:
இயற்பியல்- 2,710
வேதியல்- 1,693
உயிரியல்- 652
தாவரவியல்- 15
விலங்கியல்- 7
கணக்கு- 3882
கணினி அறிவியல்- 993
வணிகவியல்- 2,587
கணக்கு பதிவியல்- 2,403
வணிக கணிதம்- 605
கணித தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் கூடுதலாக முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டு 8.45 லட்சம் பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி 15-ம் தேதி வரை நடந்தது.
முன்னரே அறிவித்தபடி இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு வெளியிடப்பட்டது.
மருத்துவராவதே லட்சியம்: சுசாந்தி
மாநிலத்தில் முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஊக்குவிப்பே வெற்றிக்கு காரணம். இந்த வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மருத்துவராவதே என லட்சியம் என மாணவி சுசாந்தி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், தமிழகத்திலேயே ஈரோடு (வருவாய் மாவட்டம்) முதலிடத்தை பெற்றுள்ளது. திருவண்ணாமலை கடைசி இடத்தை வகிக்கிறது.
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 89.61% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். மாணவர் முகமது ஜாவீது முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்து 477 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 77 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.61 சதவீதமாகும். இதில் மாணவர்கள் 86.12 சதவீதமும், மாணவிகள் 92.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாமக்கல் இரண்டாம் இடத்தையும், விருதுநகர் மூன்றாம் இடத்தையும், பெரம்பலூர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. வருவாய் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்...
மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:
1. ஈரோடு - 97.05%
2. நாமக்கல் - 96.59%
3. விருதுநகர் - 96.12%
4. பெரம்பலூர் - 96.03%
5. தூத்துக்குடி - 95.72%
6. கன்னியாகுமரி - 95.14%
7. கோயமத்தூர் - 94.89%
8. திருநல்வேலி - 94.37%
9. திருச்சி- 94.36%
10. திருப்பூர்- 94.12%
11. சிவகங்கை- 94.06%
12. தருமபுரி- 93.24%
13. ராமநாதபுரம்- 93.06%
14. கரூர்- 92.97%
15. தேனி- 92.73%
16. மதுரை- 92.34%
17. சென்னை- 91.9%
18. சேலம்- 91.53%
19. திண்டுக்கல்- 90.91%
20. தஞ்சாவூர்- 89.78%
21. புதுக்கோட்டை- 89.77%
22. புதுச்சேரி- 89.61%
23. கிருஷ்ணகிரி- 89.37%
24. திருவள்ளூர்- 88.23%
25. காஞ்சிபுரம்- 87.96%
26. நாகப்பட்டினம்- 87.95%
27. ஊட்டி- 86.15%
28. விழுப்புரம்- 85.18%
29. வேலூர்- 85.17%
30. கடலூர்- 84.18%
31. திருவள்ளூர்- 83.7%
32. அரியலூர்- 79.55%
33. திருவண்ணாமலை- 74.4%
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்து 477 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 77 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.61 சதவீதமாகும். இதில் மாணவர்கள் 86.12 சதவீதமும், மாணவிகள் 92.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி மாநில அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதலிடத்தை பிரிம்ரோஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகமது ஜாவீது 1,191 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். 2-ம் இடத்தை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் ஆனந்தவேல் 1,187 மதிப்பெண் பெற்றும், 3-ம் இடத்தை காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹமீத்நஸீரா 1,186 மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்தனர்.
புதுச்சேரி மாநில அளவில் அரசு பள்ளிகளில் முதல் 10 இடங்களையும் காரைக்காலை சேர்ந்த மாணவர்களே பிடித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக