வெள்ளி, 9 மே, 2014

+2 எனப்படும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் :பரங்கிப்பேட்டை பள்ளிகளின் நிலவரம்

பரங்கிப்பேட்டை :+2 எனப்படும் 12 ஆம் வகுப்பு தேர்வு  முடிவுகள்  இன்று வெளியாகின  வழக்கம் போல் தமிழகத்தில் மாணவிகளின் ஆதிக்கமே இவ்வருடமும் பரங்கிப்பேட்டையில் பள்ளிகளின் அடிபடையில்  பரங்கிப்பேட்டை அளவில் மாணவி ஏ.புவனேஸ்வரி, சேவாமந்திர் பள்ளி - 1115 மதிப்பெண்கள் பெற்று முதல்  இடத்தை பிடித்தார்   மாணவி ஃபைரொஸ் பானு,  1102 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்  மாணவன் பிரவீன் ராஜசோழன், சேவாமந்திர் மெட்ரிக் பள்ளி-  1087 மதிப்பெண்கள்பெற்று முன்றாம்  இடத்தையும் பிடித்தார்  மாணவி ஜெய்னுல் ருபைதா, கலிமா மெட்ரிக் பள்ளி - 1086 மதிப்பெண்கள் நான்காம் இடத்தையும் அனுக்ஷ்யா 1022  மதிப்பெண்கள் மற்றும் பிரியங்கா  1014 மதிப்பெண்கள் பெற்று  பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முறையே அடுதடுத்த இடங்களை பெற்றுள்ளனர் 
இன்று வெளியிடப்பட்ட மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகளின் படி பரங்கிப்பேட்டை பள்ளி மாணவ - மாணவியர் கள்,அரசு பெண்கள்  மேல்நிலை பள்ளி 92% தேர்ச்சியும்  கலிமா மேல்நிலை பள்ளி 85  % தேர்ச்சி யும் மற்றும் மூனா ஆஸ்திரேலியன்  நூறு சதவிகிதம் தேர்ச்சி யும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி  55% தேர்ச்சி யும் சேவாமந்திர் மேல் நிலை பள்ளி நூறு சதவிகிதம் தேர்ச்சி யும் பெற்றுள்ளனர்

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி :-பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் அதிகமான மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இந்தப் பள்ளி தேர்ச்சி 92% ஆகும்.

இப்பள்ளில் முறையே  முதல் இடத்தை மாணவி ஃபைரோஸ் பானு (1102), இரண்டாம் இடத்தை மாணவி அனுக்ஷ்யா (1022), மூன்றாம் இடத்தை மாணவி பிரியங்கா (1014) ஆகியோர் பிடித்துள்ளனர்.

சேவாமந்திர் பள்ளி :-சேவாமந்திர் பள்ளியில் மெட்ரிக் பள்ளி மற்றும் தமிழ்வழி மேல்நிலைப்பள்ளி என இரு பள்ளிகள் உள்ளது. இந்த இரு பள்ளிகளுமே 100% தேர்ச்சியை அடைந்துள்ளது. மெட்ரிக் பள்ளியில்  முதல் இடத்தை மாணவன் பிரவீன் ராஜசோழன் (1087), இரண்டாம் இடத்தை மாணவன் ஜெயபிரகாஷ் (1045), மூன்றாம் இடத்தை மாணவி பார்கவி (958) ஆகியோர் பிடித்துள்ளனர். தமிழ்வழி பள்ளியில் முதல் இடத்தை மாணவி புவனேஷ்வரி (1115), இரண்டாம் இடத்தை மாணவி மோனிஷா (1058), மூன்றாம் இடத்தை மாணவி பவித்ரா (1045) ஆகியோர் பிடித்துள்ளனர்.

கலிமா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி: -

கலிமா பள்ளி இத்தேர்வில் 85% தேர்ச்சியை பெற்றுள்ளது. இதில் முதல் இடத்தை மாணவி ஜைனுல் ருவைதா (1086), இரண்டாம் இடத்தை மாணவி முபீனா (1031), மூன்றாம் இடத்தை இரண்டு பேர் மாணவன் அப்துல் சுக்கூர் (925) மாணவி சஃபீனா (925) ஆகியோர் பிடித்துள்ளனர்.

மூனா ஆஸ்திரேலியன் பள்ளி:

இப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் முதல் இடத்தை மாணவி நிஹாஸா (910), இரண்டாம் இடத்தை மாணவி ஆயிஷா சித்தீக்கா (842), மூன்றாம் இடத்தை மாணவன் முஹம்மது யூசுப் அலி (764)ஆகியோர்  பிடித்துள்ளனர்

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி:-

இப்பள்ளியின் தேர்ச்சி வெறும் 55% மட்டுமே. இருந்தாலும் கடந்த ஆண்டை விட  7% அதிகரித்து காணப்படுகிறது  இதில் முதல் இடத்தை மாணவர் காளிதாஸ் (920), இரண்டாம் இடத்தை மாணவன் விஜயகுமார் (911)  ஆகியோர்  பிடித்துள்ளனர்.

மேலும் வெளியூரில் படித்த பரங்கிப்பேட்டை மாணவ - மாணவிகள்  முழு விபரங்கள் விரைவில் .




 
 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக