கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி "Right To Education" (RTE), நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில், 25% ஏழை மாணவர்களுக்கு வழங்க, தனியார் பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. ...
தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களை சேர்க்க 'மே 18'ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இவ்வருடம் சுமார் 80,000 மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்தில், குறைந்தது 8,000 முஸ்லிம் மாணவர்கள் பயன் பெறும் வாய்ப்புள்ளது.
ஒரு மாணவரின் ஆண்டுக்கட்டணம் ரூ. 10,000 என வைத்துக் கொண்டால், 8 கோடி ரூபாய் அளவுக்கு சமுதாயம் பயன் பெறமுடியும்.
இத்திட்டத்தின் மூலம், முஸ்லிம்கள் தான் அதிகளவு பயன் பெறமுடியும், காரணம் ஏழை எளிய மக்களில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் தான் அதிகமாக உள்ளது.
அரசு ஊழியர்களின் பிள்ளைகளோ, வசதி படைத்தவர்களோ இத்திட்டத்தில் சேரவே முடியாது.
இதற்கான விண்ணப்பம் வழங்கும் கடைசி நாளாக 'மே 18'ஐ அறிவித்திருந்தாலும், 16 ந்தேதி வெள்ளிக்கிழமை 'தேர்தல் முடிவுகள்' வரவிருப்பதாலும்,
அதற்கடுத்து, 17 மற்றும் 18 ஆகிய தேதிகள், விடுமுறை நாட்கள் என்பதாலும், வியாழக்கிழமை மே 15 வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறமுடியும்.
சிக்கல்களும் - தீர்வுகளும்
'''''''''''''''''''''''''' '''''''''''''''''''''''''' ''''''''''''''
தனியார் பள்ளி நிர்வாகங்கள், இதனை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டாமல் இருப்பதற்கு 2 முக்கிய காரணங்கள் உண்டு.
1) ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு கண்டிப்பாக செலுத்தும் என்ற உத்தரவாதம் இருந்தாலும், கணக்குகள் சமர்ப்பித்து அடுத்த ஆண்டு தான் கல்வி நிறுவனங்களுக்கு, அரசிடமிருந்து பணம் கிடைக்கும்.
2) அரசு நிர்ணயித்த அளவு தொகை தான் கிடைக்கும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக தொகையை வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு, இது (சிறிய அளவில்) பாதிப்பை ஏற்படுத்தும்.
(இத்திட்டத்தில், கடந்த ஆண்டு கல்வி பயின்ற 23,0248 மாணவர்களுக்கும், அதற்கு முந்தைய ஆண்டு பயின்ற சுமார் 8,000 மாணவர்களுக்கும் சேர்த்து, ரூ. 25 கோடி (சராசரியாக ஒரு மாணவருக்கு ரூ.8,000 என்ற கணக்கில்), இனிமேல் தான் அரசு செலுத்தப் போகிறது.)
இத்திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதில், தனியார் பள்ளிகளின் தயக்கத்துக்கு இது தான், முக்கிய காரணம்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
'''''''''''''''''''''''''' '''''''''''''''''''''''''' '''''''''''''''''''''''''' ''''''
ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று, நமது குடும்ப சூழலையும், வருமான நிலைமையையும் எடுத்துச்சொல்லி, இத்திட்டத்திற்கு தாங்களே அதிகம் தகுதியுடையவர்கள் என்பதை புரிய வைக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகங்களுக்கு உள்ள நடைமுறை சிரமங்களையும் நாம் கருத்தில் கொண்டு, மிகவும் நளினமான முறையில் நடந்துக் கொள்ள வேண்டும்.
தனித்தனியாக செல்லாமல், 4 - 5, பெற்றோர்களாக சேர்ந்து சென்று பேசவேண்டும்.
பக்குவமாக பேச வேண்டிய அதேநேரம், நாங்கள் ஏழைகள் என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறவேண்டும்.
பள்ளி நிர்வாகம், ஓரிரு முறை நம்மை அலைய விடுவது போன்று தோன்றினாலும் சோர்ந்து விடக்கூடாது.
எப்போது சென்றாலும், 4 - 5 பெற்றோர்களாக, சேர்ந்தே செல்ல வேண்டும், நமது சுயநலன் காரணமாக, பள்ளி நிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகி விடக்கூடாது.
எங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பில்லை என்றால், இத்திட்டத்தின் பயனாளிகள் யார் என்பதை, (பக்குவமாக) கேட்டு, நெருக்கடி கொடுக்க வேண்டும்.
நாம், நமது சமுதாய மாணவர்களுக்காக போராடும் அதேவேளையில், நம்மைவிட வசதி குறைந்த பிற சமுதாய மாணவர்கள் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
எக்காரணம் கொண்டும் , நம்மில் உள்ள செல்வந்தர்கள் இத்தட்டத்தை பயன்படுத்த முயலக்கூடாது.
மீண்டும் நினைவூட்டுகிறோம்
'''''''''''''''''''''''''' '''''''''''''''''''''''''' '''''''''''''''''''''''''' ''
இது, ஆண்டுக்கு ரூ.1,000 அல்லது 2,000 கிடைக்கும் 'சிறுபான்மை கல்வி உதவி' கிடைப்பதைப் போன்ற சாதாரண திட்டம் அல்ல.
விழித்திருந்து சில நாட்கள் செயல்பட்டால், சமுதாயத்துக்கு சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கு நன்மை உண்டாகும்.
ஆங்காங்கே உள்ள சமுதாய இயக்கங்களும் இதில் தலையிட்டு, மக்களுக்கு நன்மை பயக்க வழிக்கான வேண்டும்.
தேவைப்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள, நம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட, ஒரு வழக்கரிஞரை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றும் பேசலாம்.
இது விஷயத்தில் உதவி தேவைப்படுவோர் 9380945727 என்ற நம்பரில், என்னை (ஜாகிர் ஹுசைன்), தொடர்பு கொள்ளலாம்.
அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசி, தீர்வு கொடுக்க 24 மணி நேரமும், இன்ஷா அல்லாஹ்... நான் தயார்.
முக்கிய குறிப்பு
'''''''''''''''''''''''''' '''''''''''''''''
நாம் இப்படி பள்ளி நிர்வாகத்துடன் மோதுவதால் நமது பிள்ளைகளுக்கு பள்ளி நிர்வாகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைப்பது எவ்வகையிலும் சரியான விஷயமல்ல.
எனவே கண்ணியம் காத்து, நமது கோரிக்கை வெல்வதில் கவனமும் உறுதியும் தேவை.
விண்ணப்ப படிவங்கள், அந்தந்த பள்ளியில் மட்டுமின்றி, கல்வித்துறை அலுவலகத்திலும் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களை சேர்க்க 'மே 18'ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இவ்வருடம் சுமார் 80,000 மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டத்தில், குறைந்தது 8,000 முஸ்லிம் மாணவர்கள் பயன் பெறும் வாய்ப்புள்ளது.
ஒரு மாணவரின் ஆண்டுக்கட்டணம் ரூ. 10,000 என வைத்துக் கொண்டால், 8 கோடி ரூபாய் அளவுக்கு சமுதாயம் பயன் பெறமுடியும்.
இத்திட்டத்தின் மூலம், முஸ்லிம்கள் தான் அதிகளவு பயன் பெறமுடியும், காரணம் ஏழை எளிய மக்களில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் தான் அதிகமாக உள்ளது.
அரசு ஊழியர்களின் பிள்ளைகளோ, வசதி படைத்தவர்களோ இத்திட்டத்தில் சேரவே முடியாது.
இதற்கான விண்ணப்பம் வழங்கும் கடைசி நாளாக 'மே 18'ஐ அறிவித்திருந்தாலும், 16 ந்தேதி வெள்ளிக்கிழமை 'தேர்தல் முடிவுகள்' வரவிருப்பதாலும்,
அதற்கடுத்து, 17 மற்றும் 18 ஆகிய தேதிகள், விடுமுறை நாட்கள் என்பதாலும், வியாழக்கிழமை மே 15 வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறமுடியும்.
சிக்கல்களும் - தீர்வுகளும்
''''''''''''''''''''''''''
தனியார் பள்ளி நிர்வாகங்கள், இதனை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டாமல் இருப்பதற்கு 2 முக்கிய காரணங்கள் உண்டு.
1) ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு கண்டிப்பாக செலுத்தும் என்ற உத்தரவாதம் இருந்தாலும், கணக்குகள் சமர்ப்பித்து அடுத்த ஆண்டு தான் கல்வி நிறுவனங்களுக்கு, அரசிடமிருந்து பணம் கிடைக்கும்.
2) அரசு நிர்ணயித்த அளவு தொகை தான் கிடைக்கும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக தொகையை வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு, இது (சிறிய அளவில்) பாதிப்பை ஏற்படுத்தும்.
(இத்திட்டத்தில், கடந்த ஆண்டு கல்வி பயின்ற 23,0248 மாணவர்களுக்கும், அதற்கு முந்தைய ஆண்டு பயின்ற சுமார் 8,000 மாணவர்களுக்கும் சேர்த்து, ரூ. 25 கோடி (சராசரியாக ஒரு மாணவருக்கு ரூ.8,000 என்ற கணக்கில்), இனிமேல் தான் அரசு செலுத்தப் போகிறது.)
இத்திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதில், தனியார் பள்ளிகளின் தயக்கத்துக்கு இது தான், முக்கிய காரணம்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
''''''''''''''''''''''''''
ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று, நமது குடும்ப சூழலையும், வருமான நிலைமையையும் எடுத்துச்சொல்லி, இத்திட்டத்திற்கு தாங்களே அதிகம் தகுதியுடையவர்கள் என்பதை புரிய வைக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகங்களுக்கு உள்ள நடைமுறை சிரமங்களையும் நாம் கருத்தில் கொண்டு, மிகவும் நளினமான முறையில் நடந்துக் கொள்ள வேண்டும்.
தனித்தனியாக செல்லாமல், 4 - 5, பெற்றோர்களாக சேர்ந்து சென்று பேசவேண்டும்.
பக்குவமாக பேச வேண்டிய அதேநேரம், நாங்கள் ஏழைகள் என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறவேண்டும்.
பள்ளி நிர்வாகம், ஓரிரு முறை நம்மை அலைய விடுவது போன்று தோன்றினாலும் சோர்ந்து விடக்கூடாது.
எப்போது சென்றாலும், 4 - 5 பெற்றோர்களாக, சேர்ந்தே செல்ல வேண்டும், நமது சுயநலன் காரணமாக, பள்ளி நிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகி விடக்கூடாது.
எங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பில்லை என்றால், இத்திட்டத்தின் பயனாளிகள் யார் என்பதை, (பக்குவமாக) கேட்டு, நெருக்கடி கொடுக்க வேண்டும்.
நாம், நமது சமுதாய மாணவர்களுக்காக போராடும் அதேவேளையில், நம்மைவிட வசதி குறைந்த பிற சமுதாய மாணவர்கள் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
எக்காரணம் கொண்டும் , நம்மில் உள்ள செல்வந்தர்கள் இத்தட்டத்தை பயன்படுத்த முயலக்கூடாது.
மீண்டும் நினைவூட்டுகிறோம்
''''''''''''''''''''''''''
இது, ஆண்டுக்கு ரூ.1,000 அல்லது 2,000 கிடைக்கும் 'சிறுபான்மை கல்வி உதவி' கிடைப்பதைப் போன்ற சாதாரண திட்டம் அல்ல.
விழித்திருந்து சில நாட்கள் செயல்பட்டால், சமுதாயத்துக்கு சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கு நன்மை உண்டாகும்.
ஆங்காங்கே உள்ள சமுதாய இயக்கங்களும் இதில் தலையிட்டு, மக்களுக்கு நன்மை பயக்க வழிக்கான வேண்டும்.
தேவைப்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள, நம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட, ஒரு வழக்கரிஞரை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றும் பேசலாம்.
இது விஷயத்தில் உதவி தேவைப்படுவோர் 9380945727 என்ற நம்பரில், என்னை (ஜாகிர் ஹுசைன்), தொடர்பு கொள்ளலாம்.
அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசி, தீர்வு கொடுக்க 24 மணி நேரமும், இன்ஷா அல்லாஹ்... நான் தயார்.
முக்கிய குறிப்பு
''''''''''''''''''''''''''
நாம் இப்படி பள்ளி நிர்வாகத்துடன் மோதுவதால் நமது பிள்ளைகளுக்கு பள்ளி நிர்வாகம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைப்பது எவ்வகையிலும் சரியான விஷயமல்ல.
எனவே கண்ணியம் காத்து, நமது கோரிக்கை வெல்வதில் கவனமும் உறுதியும் தேவை.
விண்ணப்ப படிவங்கள், அந்தந்த பள்ளியில் மட்டுமின்றி, கல்வித்துறை அலுவலகத்திலும் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக