சனி, 10 மே, 2014

துபையில் இன்று நடந்த சாலை விபத்தில் 15 பேர் பலி


துபாய் :துபையில் இன்று நடந்த சாலை விபத்தில் 15 பேர்  பலியானார்கள் 14 பேர் படுகாயங்களுடன் மருதத்துவ மனையில் தீவிர சிக்ச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

துபையில் இன்று காலை 8:00 மணியளவில் பிரதான சாலையானஎமிரேட்ஸ் ரோட்டில் பணியாட்களன ஆசிய நாட்டை சார்ந்த
இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 
 29 நபர்களுடன் சென்றுக்கொண்டிருந்த மினிபஸ் லாரி (டிரக்)மீது மோதி 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
பலியானவர்கள் 10 இந்தியர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 5பேர் வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள்
 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 10 பேர் ஷேக் ராஷித் மருத்துவமனையிலும், மீதம் உள்ள நான்கு பேர் அல் பரஹா மருத்துவமனையிலும்  தீவிர சிக்ச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர்
இவ்விபத்து  துபாயில் பனிபரியும் ஆசிய நாட்டை சார்ந்த அனைவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது




 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக