இ-மெயில் சேவையில் நமக்கு மிகவும் கஷ்டமான விஷியமாக இருப்பது நமது இன்பாக்ஸில் இருந்து முக்கியமான மெயில்களை கண்டுபிடிப்பதது தான்.நமது இன்பாக்ஸில் இருக்கும் ஆயிரக்கணக்கான மெயில்களில் இருந்து முக்கியமான மெயில்களை கண்டுபிடிப்பதற்க்குள் நாம் பொறுமையை இழந்து விடுகிறோம்.இனி நாம் இவ்வளவு கஷ்டபட தேவையில்லை. விரைவாக மெயில்களை தேடும் வகையில் ஜிமெயில் இன்பாக்ஸ் இப்பொழுது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் சந்தோஷமான விஷியம் என்னவென்றால் இது ஆன்டிராய்ட் 4.0 வெர்சன்கள், ஐபோன் மற்றும் ஐபேட் போன்றவைகளில் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் பல புதிய தீம்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு பிடித்த தீம்களை வைத்துக்கொள்ளலாம். புதிய ஜிமெயில் இன்பாக்ஸ் பற்றிய தகவல்கள்
இதில் பிரைமரி டேப், புரோமோஷன் டேப், சோசியல் டேப், அப்டேட் டேப், என பிரிக்கப்பட்டுள்ளது.
பிரைமரி டேப், இதில் நண்பர்கள் மட்டும் குடும்பத்தினர் சம்மந்தபட்ட மெயில்கள் இருக்கும்.
புரோமோஷன் டேப், இதில் சலுகைகள், டீல்ஸ் சம்மந்தபட்ட மெயில்கள் இருக்கும்.
சோசியல் டேப், இதில் கூகுள் , பேஸ்புக், டிவிட்டர், போன்ற சோசியல் வெப்சைட்கள் சம்மந்தபட்ட மெயில்கள் இருக்கும்.
அப்டேட் டேப், பில், கன்பர்மேஷன் மெயில், ஸ்டேட்மென்ட், ரிஷிப்ட் சம்மந்தபட்ட மெயில்கள் இருக்கும்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக