ஞாயிறு, 21 ஜூலை, 2013

பரங்கிப்பேட்டை பைத்துல்மால் கமிட்டி ஃபித்ரா ஆலோசனைக் கூட்டம்!

 
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை  பைத்துல்மால் கமிட்டி (பொதுநிதி கருவூலம்) சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் வழங்கப்படும் ஃபித்ரா என்னும் பெருநாள் தர்மம் வசூல் மற்றும் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு மீராப்பள்ளியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,  பைத்துல்மால் கமிட்டி தலைவர் SS.அலாவுதீன்  மற்றும் வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டை அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஊர் பொது மக்களும்   கலந்துக் கொண்டனர்.
 
இந்தாண்டு நபர் ஒன்றுக்கு ஃபித்ரா தொகை ரூ 60 நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்வதற்கான ரசீது புத்தகம் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
 

 
                                               
 
நன்றி :MYPNO.COM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக