
கடலூர்:வெள்ளாற்றில் கடல் நீர் புகாமல் தடுக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் 36 கி.மீ. தூரம் வரை கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் ஆற்றின் அருகே உள்ள விளை நிலங்களில் உப்புப் படலங்கள் படிந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோல் வெள்ளாற்றிலும் 20 கி.மீ. தூரத்துக்கு கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த ஆறுகளில் கடல் நீர் உட்புகாதவாறு கடல் முகத்துவாரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவு வரை தடுப்பணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக