டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம் நேற்று பதவியேற்றார்.உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அல்டமாஸ் கபீரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து 40-வது தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் இன்று பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
பதவியேற்றுள்ள சதாசிவம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26-ந் தேதி வரை பதவியில் நீடிப்பார்.தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி கடந்த 1951-54 ஆம் ஆண்டு காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அவருக்குப் பின் தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2வது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நீதிபதி சதாசிவம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக