நெய்வேலி:கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு பணி நடைபெற உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. டவுன்ஷிப், பாரதி விளையாட்டு அரங்கில் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதற்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து தகுதியுடைய ஆண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 23 வயது வரை உள்ள ஆண்கள் தகுதியுள்ள பணியிடத்துக்கு இந்த மாதம் 18-ம் தேதி விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு படித்தவர்கள் டிரேட்ஸ்மேன் பணிக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்கள் பொது ராணுவப் பணிக்கும், குறிப்பிட்ட சில பாடங்களோடு 12-ம் வகுப்பு படித்தவர்கள் பேலன்ஸ் பிரிவு பணிக்கும் விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18-ம் தேதி சோல்ஜர் டெக்னிக்கல் மற்றும் சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட் பணிகளுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு ஆள்சேர்க்கை நடைபெறும். உடல் தகுதி தேர்வு 19-ம் தேதி நடைபெறும்.
19-ம் தேதி சோல்ஜர் ஜெனரல் டியூட்டி பணியிடத்துக்கு திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு ஆட்சேர்க்கை நடைபெறும். உடல் தகுதி தேர்வு 20-ம் தேதி நடைபெறும்.
20-ம் தேதி சோல்ஜர் ஜெனரல் டியூட்டி பணியிடத்துக்கு வேலூர், விழுப்புரம், சென்னை, புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு ஆள்சேர்க்கை நடைபெறும். உடல் தகுதி தேர்வு 21-ம் தேதி நடைபெறும்.
21-ம் தேதி சோல்ஜர் டிரேடஸ்மென் பணியிடத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு ஆள்சேர்க்கை நடைபெறும். உடல்தகுதி தேர்வு 22-ம் தேதி நடைபெறும்.
22-ம் தேதி சோல்ஜர் கிளார்க் அண்டு ஸ்டோர் கீப்பர்ஸ் டெக்னிக்கல் பணிகளுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு நடைபெறும். உடல் தகுதி தேர்வு 23-ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக