செவ்வாய், 16 ஜூலை, 2013

பரங்கிப்பேட்டை போலீஸ்காரர் பனியின் போது மாரடைப்பால் மரணம்

பரங்கிப்பேட்டை சிறைச் சாலையில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பில் இறந்தார்.
சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த ராமதாஸ் (54). இவர் பரங்கிப்பேட்டை கிளை சிறைச் சாலையில் முதுநிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை பாரா பணியில் இருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இவரது உடல் பரங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது
photos:muthuraja

0 கருத்துகள்:

கருத்துரையிடுக