ஸ்ரீநகர் :காஷ்மீரில் (17/072013) இரவு எல்லைப் பாதுகாப்புப் படையினர் “தேடுதல் வேட்டை” என்ற பெயரில் ராம்பானில் உள்ள நுழைந்து அங்கிருந்த இமாமை கடுமையாக தாக்கியுள்ளனர்.பள்ளியின் இமாம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, காஷ்மீர் மாநிலம் ரம்பானில் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமை (18/07/2013) பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஜனநாயக வழியில் போராடிய மக்களின் மீது, பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் இறந்தனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
கண்துடைப்பு விசாரணை அறிவிப்பால், திருப்தியடையாத பொதுமக்கள், ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு படையின் காட்டு மிராண்டித்தனத்தால், காஷ்மீரில் கடும் பதட்டம் நிலவுகிறது.
மக்கள் வரிப்பணத்தின் பெரும்பகுதியை உண்டு கொழிக்கும் ராணுவம், சங்க்பரிவார்களை மிஞ்சும் அளவுக்கு, முஸ்லிம்களை கொன்று குவித்து காஷ்மீரைக் கொலைக் களமாக்கி வருகிறது.
மக்கள் வரிப்பணத்தில் குடிக்கும் சாராயத்தின் போதை தலைக்கேறும் போதெல்லாம், முஸ்லிம்களின் ரத்தத்தை குடிக்கும் காட்டேரிகளாக மாறிவிடுகிறது, ராணுவப்படை.
பள்ளிக்குள் புகுந்து இமாமைக் கொன்று, குரானை கிழித்தும் எரித்தும் காட்டு தர்பார் நடத்திய பாதுகாப்புப் படை (Border security Force -BSF) பொதுமக்களின் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியதையடுத்து காஷ்மீரில் கடும் பதட்டம் நிலவுகிறது,
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொபைல் போன், இணையதள சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வழக்கம்போல மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாக விசாரணைக்கு உத்தரவிடுவதாக உள்துறை அமைச்சர் அறிக்கை விட்டுள்ளார்.
காஷ்மீரில் அரசுப் படைகள் நடத்தியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்மாநில மனித உரிமை ஆணையத்திடம் மட்டும், இதுவரை 5,699 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெறும் 50 வழக்குகளில் மட்டுமே குற்றமிழைத்த ராணுவத்தினரை விசாரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது,
இந்த 50 வழக்குகளில் கூட, தற்பொழுது 42 வழக்குகளைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒவ்வொன்றாக எடுத்து, “ஆதாரம் இல்லை;
“ராணுவத்தின் மரியாதையைக் கெடுக்கும் வண்ணம் புனையப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு” என்பன போன்ற காரணங்களைக் கூறி,
அந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட ராணுவ – துணை ராணுவத்தினரை காப்பாற்றி விட்டது, மத்திய அரசு.
அப்பாவி முஸ்லிம்களை எல்லைப்புறத்திற்குக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல, மோதல் நடந்திருப்பதாகப் பொய்க் கணக்குக் காட்டி பரிசுப் பணத்தைச் சுருட்டிக் கொள்வது,
பதவி உயர்வுகளைப் பெறுவது என ராணுவமும் துணை ராணுவமும் காஷ்மீரில் நடத்தியிருக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் மோசடிகளுக்கும் அளவே கிடையாது








0 கருத்துகள்:
கருத்துரையிடுக